​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"நேரு பிரதமராக இருந்த போது லடாக்கில் உள்ள பகுதியை சீனா கைப்பற்றியது" - மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்

Published : Jul 24, 2022 7:35 PM

"நேரு பிரதமராக இருந்த போது லடாக்கில் உள்ள பகுதியை சீனா கைப்பற்றியது" - மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்

Jul 24, 2022 7:35 PM

1962ஆம் ஆண்டில் நேரு பிரதமராக இருந்த போது லடாக்கில் உள்ள பகுதியை சீனா கைப்பற்றியதை சுட்டிக்காட்டிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்றைய இந்தியா உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாக திகழ்வதாக தெரிவித்துள்ளார்.

கார்கில் போரின்போது ஜம்மு எல்லையில் போரிட்டு உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தினரை ராஜ்நாத் சிங் சந்தித்தார். பின்னர் பேசிய அவர், நாட்டிற்காக தங்கள் இன்னுயிர் ஈந்தவர்கள் என்றும் நினைவுக் கூரப்படுவார்கள் என்றார்.

மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் காஷ்மீர் ஆகியவை என்றும் இந்தியாவின் பகுதியாகவே இருக்கும் என்றும் அவர் கூறினார்.